Sunday, January 30, 2011

மன மணம்



மன மணம்

'' த்யானமா ....நமக்கு எதுக்குங்க அதெல்லாம் ...வேலையில்லாத வேலை!''
'' உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா?
''சொல்லுங்கள்''
''என் நண்பன் ஒருவன் ரொம்ப பிஸி ஆசாமி.
workaholic என்பதற்கு சரியான உதாரணம்.
ஏதாவது செய்து கொண்டே இருக்கவேண்டும்.
கொஞ்ச நேரம் செய்ய  எதுவும் இல்லை என்றால் ஆடிப்போய்விடுவான்.
வீட்டில் கூட ஒரு tv அல்லது music system அலறிக்கொண்டே இருந்தால் தான்
அவனால் ரெஸ்ட் எடுக்க முடியும்.
தனியாக, எதுவும் செய்யாமல், 'தன் துணை மட்டும்' என்று இருப்பது அவனுக்கு
பெரும் இம்சை.
'சும்மா இருப்பது தப்பு' என்பது அவனது நம்பிக்கை.
''தியானம் சும்மா இருக்கும் வீண் வேலை, சோம்பேறிகள் தான் அப்படி இருக்க
முடியும் என்றான்'' என்னிடம் ஒருநாள்.
''உனக்கு சமைக்கத் தெரியுமா'' என்று நான் கேட்டேன்.
திடீர் என்று இப்படி ஏடா கூடமாய் கேட்டதும் அவனுக்கு ஒரு வியப்பு.
''எனக்கு சமைக்கத் தெரியாது.சமையலுக்கும் த்யானத்துக்கும் என்ன கனெக்ஷன்?
ஏன் பேச்சை மாற்றுகிறாய்?'' என்று கேட்டான்.
நான் தொடர்ந்தேன்: '' சமையல் செய்யத் தெரியாததை விட மோசமானது ஏதாவது உண்டா?''
நண்பனுக்கு சூடாகி விட்டது....பதிலடி கொடுக்கவேண்டும்என்று.
''ஏன் இல்லை? ...
சமைக்கத்தெரியாத மனைவி இருந்தால் அது இன்னும் மோசமானதுதான்.''
நான் மகிழ்ந்தேன்...பயல் வலையில் விழுந்து விட்டான்.
''சரியாய்ச் சொன்னாய்...அறிவுள்ள பதில் ...
இன்னொரு கேள்வி ... ஈஸிதான், கஷ்டமில்லை....
அதையும் விட மோசமான நிலை ஏதாவது உண்டா?''
கொஞ்சம் யோசித்துச் சொன்னான், '' அதை விட என்ன மோசமாக இருக்க முடியும்?''
''இருக்கிறது...அதைவிட மோசமானது ... யோசி...''
''தெரியவில்லை, நீயே சொல்லு''
நான் சொன்னேன்: '' அந்த சமைக்கத் தெரியாத துணைவி சமைத்து உன்னைச் சாப்பிடச் சொன்னால்? ..... அதை விட மோசமில்லையா?''
நண்பன் சிரித்தான்.
அவனுக்கு இன்னும் மணமாகவில்லை. எடுப்புச் சாப்பாடு...சிரிக்க முடியும்.
''ஆனாலும் எனக்கு இன்னும் புரியவில்லை, நீ ஏன் பேச்சைத் திசை திருப்புகிறாய்?
த்யானத்துக்கும் சமையலுக்கும் என்ன சம்பந்தம்?''
நான் பிடித்தேன்:
''த்யானத்தைப்  பற்றி நீ சொன்னது அதுபோலத்தான்.
த்யானமே செய்தறியாத ஒருவன் த்யானத்தைப் பற்றி இதுபோல் விமர்சனம் செய்வது
சமைக்கத் தெரியாதவன் சமையல் செய்வது போலத்தானே....
அது சோம்பேறிகளின் பொழுதுபோக்கு என்று நீ சொல்வது உனக்கே இழிவு.
த்யானத்தின் உன்னத சக்தியை நீ அறிய வேண்டுமானால் முதலில் த்யான அனுபவம்
சொந்தமாய் உணர்ந்து தெரிந்துகொண்டால் தான் சாத்தியம்''
ஸ்தம்பித்து விட்டான் நண்பன்.
''இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?''
''நம் மனதுக்குள்ளே உள்ள மாய சக்தியை வேறே எந்த வகையிலும் உணர முடியாது....மனதை ஒருமைப்படுத்தி பிறகு அதே மனத்தின் மூலம் ஆழ்நிலைத் தியானத்தை உணர முடியும். பிறகு அந்த மனத்தின் நுட்ப சக்தியால் மனதையே கடந்து 'நாம்' என்னும் ஆத்ம நிலயை எட்டலாம்.
இது எல்லாவற்றுக்கும் சாதனை தான் அடிப்படை.
உடலை சமாதான நிலையில் இருத்தப் பழக வேண்டும்.
மனதை அமைதியாய் உள்ளடக்கப் பழக வேண்டும்.
சப்தம் குறைய  நிசப்தம் தெரிவதுபோல் மனத்தில் ஓசையாய் அலைமோதும் எண்ண அலைகள் தானே அடங்க அடங்க அந்த ஆழம், அந்த ஆழத்தை அறியும், நம் உள்ளே நாமாய் இருக்கும், நம்மை அறிவதும் அறிவிப்பதும் அறிந்துகொள்வதும்
எல்லாமாய்த் தெளியும்

2 comments:

  1. Very interesting!! I must also start Dhanam asap.
    Thanks for opening me up.

    ReplyDelete
    Replies
    1. Yes, you can.
      And you will thank me once you do.

      Delete