Sunday, January 30, 2011

மூளை இழப்பு


மூளை இழப்பு

[ BRAIN DRAIN ]

நகைச்சுவைச் சங்கம்
திருவல்லிக்கேணி கிளை
ஹிந்து உயர்நிலைப்பள்ளியில் ஒரு வகுப்பறை....
ஜனவரி 1985கடைசி பென்ச்சில் நான்...(habits die hard)...பழைய ஸ்கூல் பழக்கம்!
குணா தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் ஜோக் சொல்ல வந்தவர்களை அறிமுகம் செய்து நடு நடுவே சிரிப்பு வெடிகளையும் பொருத்தமாய் உதிர்த்துக்கொண்டிருந்தார்.
தலைவர் சீதாராமன் ஒரு புன்னகையுடன் இதை எப்படி classify பண்ணலாம் என்ற யோசனையோடு அமர்ந்திருந்தார்.
ஒரு இளம் மாணவி மேடை ஏறி ஜோக் வெடித்தார்...
''
என் பேர் கல்பனா,நாலு நாளாய் நான் தூங்கவே இல்லை''

பரவாயில்லையே நாலு நாள் தூங்காமல் ஜோக்ஸ் தயார் செய்து கொண்டு வருகிறார்களே , நமது நகைச்சுவை சங்கத்துக்கு நல்ல எதிர்காலம் தான்...என்று நான் நினைத்துக்கொண்டேன்..

அந்த மாணவி தொடர்ந்தார்...
''
எங்க biology டீச்சர் மூளையை பற்றி பாடம் எடுக்கும்போது சொன்னாங்க
....
நம்ம எல்லோருடைய மூளையும் தினமும் ஆயிரக்கணக்கான செல்களை இழந்துகொண்டே இருக்கின்றன...
our brain cells die everyday in thousands...
so try to use whatever you are left with, more wisely every
moment
...அப்படின்னு சொன்னாங்க ...
அதிலிருந்து எனக்கு ஒரே கிலி யாகி விட்டது...
நாலு நாளாய் சரியாகத்தூங்கவில்லை.
ஒரே குழப்பம் ....
தினமும் ஆயிரக்கணக்கில் மூளையின் செல்கள் குறைந்தால் கொஞ்சநாளில் மூளையே இருக்காதே……
அப்போது எப்படி homework செய்வது?''இப்படி கேள்வியில் சிரிப்பு வெடியை வைத்து முடித்தார் அந்த மாணவி.
பலத்த கைத்தட்டல் ...
யாருக்கும் கவலை வந்ததாகத் தெரியவில்லை...
குணாவைத் தவிர...
தன் சிரிப்பை லாவகமாக அடக்கிக்கொண்டு குணா சொன்னார்:
''
இந்த நகைச்சுவை மேடைக்கு மூளை அணுத்துளிகளை முதல் முறையாக அரங்கேற்றிய செல்வி கல்பனாவுக்கு நன்றி,உங்களுக்கு வந்த இந்தக் கவலை எங்களுக்கு இல்லை, ஏனென்றால் கவலைப்படவும் brain cells வேண்டும். எங்களுக்கு கொஞ்சம் குறைவுதான்....''மறுபடி சிரிப்பு ...
குணா தொடர்ந்தார்...
''
இன்று நம்மிடையே அதிர்ஷ்ட வசமாக ஒரு யோகா நிபுணர்
வந்திருக்கிறார்...இந்த மாணவியின் கவலையைப் போக்க யோகா முறையில் சில வழிகளை சொல்ல டாக்டர் ராமன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்''இதைக் கேட்டதும் எனக்கு வெலவெலத்துவிட்டது.
ஏதோ ஜோக்ஸ் கேட்டு சிரிக்கலாம் என்று வந்தால் குணா இப்படி மாட்டிவிட்டாரே,
 
அதுவும் மூளைக்கும் எனக்கும் முடிச்சுப்போட்டால் என்ன ஞாயம்?
''
ஐயா, இந்த நகைச்சுவை மன்றத்தில் நான் யோகாவைப்பற்றி சொல்வது எடுபடாது
வேண்டாம் '' என்றேன்.
குணா என்னை எளிதில் விடுவதாக இல்லை....
''
சில வார்த்தைகள்'' என்றார்.
நான் மெதுவே என்னுடைய 'ஆகிவந்த' கடைசி பெஞ்சில் இருந்து மேடையை நோக்கி நடந்தேன் இதை எப்படி சமாளிக்கலாம் என்று மனதுக்குள்ளே 'SMS' கொடுத்தபடி,சொல்லப்போனால் செல்போன் இல்லாமலே அப்போதே 'SMS' முறையை கண்டுபிடித்ததற்கு என்னை இன்னும் யாரும் கௌரவிக்கவே யில்லை...
மனம் பதில் SMS கொடுத்தது...வெகு விரைவாக.
''
நகைச்சிவை நண்பர்களே'' என்று ஆரம்பித்தேன்,
''
நான் இங்கே வந்தது கொஞ்சம் சிரிக்கலாம் என்று.
குணா என்னை இப்படி மாட்டிவிடுவார் என்று கொஞ்சமும் நினைக்கவேயில்லை.
மூளையைப்பற்றி நான் எப்படி?....இருப்பதைப்பற்றி பேசச்சொன்னால் ஏதோ சமாளிக்கலாம்.
இல்லாததைப்பற்றி பேச அரசியல் வாதிகளால் தான் முடியும்''குணா நடுவே புகுந்தார்...
''
இருப்பதை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம்.
இல்லாததைப் பற்றி experts  நிபுணர்கள் தான் பேச முடியும்.
அதனால் தான் உங்களை அழைத்தோம்'' என்றார்....
மறுபடி சிரிப்பு.
நான் தொடர்ந்தேன்:
''
மூளை அணுக்கள் குறைந்து வருவது உண்மைதான் ...
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் செல்கள் நம்மைவிட்டுப் போய்க்கொண்டே இருக்கின்றன ... இதோ இங்கே பேசிக்கொண்டே இருக்கும்போதே  பல செல்கள் விடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அதை வேறு கோணத்தில் இருந்து பார்க்க வேண்டும். அப்போது தான் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.
நம் உடல் சுமார் 75 trillion  செல்களால் ஆனது.
[ 75 trillion cells make up an average human body]
 
சிலருக்கு கொஞ்சம் அதிகமாய் இருக்கும்.... சுமோ குத்துச்சண்டை வீரர்களைப் பார்த்திருப்பீர்கள்...அவர்களுக்கு நம்மை விட பல மடங்கு இருக்கும்...
சிலருக்கு குறைவாக இருக்கும்... சார்லி சாப்ளின் போன்ற குச்சி மனிதர்களுக்கு....
இந்த 75 trillion  என்பது 7500 கோடி ...
இதில் 14 billion செல்கள் ... சுமார் ஒன்றரை கோடி அணுக்கள் நம் கண்களில் உள்ளன...
நமது மூளை சுமார் ஐம்பது அல்லது அறுபது கோடி செல்களால் ஆனது.
ஐம்பது கோடி என்பது பெரிய விஷயம்.
இதிலே நாம் சாதாரணமாக 5%  க்கும் குறைவாகவே உபயோகிக்கிறோம்.
உலகில் மிக சிறந்த விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன் போன்றவர்கள் கூட 8 அல்லது 9 %தான் உபயோகிக்கிறார்கள்.
மீதி மூளையை உபாயோகிக்காமலே நாம் இவ்வளவு அறிவுள்ள ஜீவன்கள் போல மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம்!
ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் செல்கள் இறந்து மறைந்தால் 60..70 வருஷங்களில் …..
சுமார் நாலு கோடி முதல் ஐந்து கோடி வரை நம் மூளையில் துண்டு விழும்....
ஐம்பது கோடியில் ஐந்து கோடி...எழுபது வருஷங்களில் ....
மூளை இன்னும் பாக்கி 90%  அப்படியே  இருக்கிறது என்பது ரொம்ப மகிழ்ச்சி யான விஷயம்...
நம்மை யாரும் அசைக்க முடியாது.
என் மூளையை...இல்லாத பகுதியை கொஞ்சம் சிந்த உதவிய குணாவுக்கும் செல்வி கல்பனாவுக்கும் நன்றி.''என்று மேடையில் இருந்து இறங்கினேன்... என்னுடைய அபிமான 'வாஸ்து படி ' ஆகி வந்த கடைசி பெஞ்சை நோக்கி...
அன்றைய நிகழ்ச்சி முடிந்ததும் அந்த மாணவியை கை கொடுத்து பாராட்டினேன், பஞ்ச் லைனில் கேள்வி வைத்து அருமையாய் முடித்த நேர்த்திக்காக.
மனம் ஒருமைப்படவும் நினைவாற்றலை பெருக்கிக்கொள்ளவும் யோகப்பயிற்சிகள் உண்டா என்று கேட்டார் அந்த மாணவி.
நிச்சயம் உண்டு என்றேன்.
எனக்குக் கற்றுக்கொடுக்க முடியுமா? என்று கேட்டார்.
நகைச்சுவை சங்க உறுப்பினர்களுக்காக ஒரு course –(workshop)- யோகப் பட்டறை ஆறு நாள் நடத்தியது அந்த மாணவிக் காகத்தான்.
''
பிராணாயாமம்'' என்னும் மூச்சுப்பயிற்சி நுட்பங்கள் நம் யோகக்கலை  பொக்கிஷங்கள்.
''
ஆழ்நிலை த்யானம்'' ராஜ யோகத்தின் ஒரு மகத்தான அன்பளிப்பு நம் அனைவருக்கும்.
ஒரு patent அல்லது copyright போர்வைக்குள் அவற்றை முடக்காமல்
எல்லோருக்கும் அன்போடு அளித்த நம் ரிஷிகளும் சித்தர்களும் பெரும்பாலும் தம் பெயரைக்கூட ப்ரசித்தப்  படுத்தாமல் பகிர்ந்துகொண்டது ரொம்பவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.
பிராணாயாம மூச்சுப்பயிற்சிகளும், ஆழ்நிலை த்யானமும் தினமும் காலையும் மாலையும் அனுசரிப்பவர்களுக்கு மனம் ஒருநிலைப்படும். மனச்சஞ்சலங்கள் இறுக்கங்கள் விலகும்.
மாணவர்களின் நினைவாற்றல் பல மடங்கு பெருகும்.... ஒழுங்குபடும்.
இருப்பதை மேலும் நன்றாக உபயோகிக்கவும் சாதனமான இந்தப் பயிற்சிகள் கற்பதற்கு மிக எளியவை.
அதனாலேயே மக்கள் இவற்றை உதாசீனத்துடன் விட்டுவிட்டு மருத்துவர்களுக்கும், மாந்த்ரிகர்களுக்கும், ஜோசியர்களுக்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்று தணியும் இந்த மடமை?இதை இன்னும் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் இதில் சேர்த்தி இல்லை...
நீங்கள் யோகப் பயிற்சி செய்பவர்களானால்....அல்லது உடனே யோகப்பயிற்சி மேற்கொள்வீர்களே யானால்……
ராஜ யோகம், க்ரியா யோகம், வேதாத்திரி மகரிஷியின் 'SKY', மகரிஷி மகேஷ் யோகியின் TM , ஜக்கி வாசுதேவின் இஷா யோகா, ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் சுதர்ஷன் க்ரியா, புத்தர் அருளிய விபாசனா, சத்குரு பாபாஜியின் க்ரியா முறைகள் எல்லாம் அருமையானவை. எதிலேயும் ஆரம்பிக்கலாம் ....
எது நல்லது என்ற யோசனையில் காலத்தை ஓட்ட வேண்டாம்.

No comments:

Post a Comment