Monday, January 31, 2011

மெடிக்கல் ரெப்


மெடிக்கல் ரெப்
 
எனக்கு இன்னொரு நிகழ்ச்சி நியாபகம் வருகிறது. 
ஒரு நண்பர் '' நீங்கள் ஏன் சார் இப்படி யோகா வெல்லாம் சொல்லிக்கொடுத்து கஷ்டப் படறீங்க?நம்ம மக்களுக்கு எல்லாம் உடம்பு வணங்காமல் எளிதாய் வேண்டி இருக்கிறது.
நீங்கள் ஏன் medical representative ஆகக் கூடாது? அது நல்ல லைன்.
வருவாயும் அதிகம் கிடைக்கும்.
பல இடங்களுக்கு செல்ல வாய்ப்பும் உண்டு.'' என்றார்.
''
இல்லீங்க அதெல்லாம் சரிபடாது.
பல மருந்துகளின் பேர் எல்லாம் வாயிலே நுழையாது. வேண்டாம்.'' என்றேன்.
''
அதனால் என்ன, போகப் போக வந்துவிடும்.
உங்களுக்கு தகுதி இருக்குங்க, அதனால் தான் சொல்றேன்.''

என் தகுதியைப்பற்றி அவருக்கு எப்படித் தெரியும்?
''
எப்படி சொல்றீங்க?''
''
ஒரு medical rep க்கு தகுதி இருக்கணும்னா மூணு விஷயம் தேவை.
ஒண்ணு: கையிலே பை (brief case)இரண்டு: கழுத்திலே டை (tie)மூணாவது: வாயிலே பொய் (lie)உங்களுக்கு இரண்டு விஷயம் already இருக்கு .
மூணாவது மட்டும் சேர்த்தால் போதும்.
medical rep
ஆகி விடலாம்.'' என்றார்.

''
எனக்கு என் மனைவியிடமே பொய் பேச வராது ...
இதெல்லாம் சரிபடாது விடுங்க '' என்றேன், அப்பாவியாக.
''
அதைச் சொல்லலீங்க, உங்ககிட்டே கைப்பை இருக்கு...
பொய் சரளமாய் வரது... 
ஒரு tie மாத்திரம் நல்லதாய் பளிச்சுன்னு வாங்கிட்டா போதும்.'' என்றார் சிரிப்புக்கிடையே
கொஞ்சம் நல்ல டையா பளிச்சுன்னு இருக்கும்படி தேடிட்டிருக்கேன் அப்போலேருந்து...
இதை அவர் என்னிடம் சொன்ன போது எனக்குப் பக்கத்தில் தமிழ் தெரியாத இன்னொரு நண்பர் இருந்தார்.
''what is the joke? …translate in English, so I can enjoy it too''  
என்றார்.
அவர் டை கட்டி இருந்தார், …..சொல்ல  பயமாய் இருந்தது....
medical rep  
ஆக இருந்தால்?இந்த ஜோக் தமிழில் தான் எடுபடும்.
இதை ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கமுடியும்?
punch line
போய் விடும்.
அதே போல் சில ஆங்கில ஜோக்ஸ் தமிழில் எடுபடாது.
''this is a non-transferable joke''  
என்று சொல்லி சமாளித்தேன்....
non-translatable
என்றால் கொஞ்சம் கரடு முரடாய் இருக்கிறதே என்று

No comments:

Post a Comment