தாடி
சில பேர் தியானம் (meditation) கத்துக்கணும்னு யாராவது தாடியோட இருக்கறவங்க பின்னாலேயே போவாங்க.
நமக்கெல்லாம் தாடி மேலே ஒரு மரியாதை.
தாடி வெச்சவர்கள் எல்லாம் சாமியார்கள் என்று நம்புகிற வெகுளித்தனம்.
அரபு நாடுகளில் தாடி வெச்சவங்களை கொஞ்சம் உஷாராக கவனிக்கறாங்க.
எந்த தாடியில் எந்த பாம்பு (bomb) இருக்குமோ என்ற நிலை....
ஒருவர் அப்படித்தான் ஒரு போலிச் சாமியாரிடம் ஏமாந்ததில் தாடியைக் கண்டாலே பிடிக்காது. ஆனால் தமிழ் சினிமா மோகம்.
''நான் கடவுள்'' திரைப்படம் பார்த்தே ஆக வேண்டும் .... தாடியோடு நாயகன் இருந்தாலும் பரவாயில்லை என்று படம் பார்க்கப் போனார்.
அவருக்குக் கூட்டத்தில் படம் பார்க்கப் பிடிக்காது.
கடைசி வாரம் படம் திரையிலிருந்து விலகுமுன் பார்ப்பது அவர் வழக்கம்.
காலி இடங்களுக்கு நடுவே காலைத்தூக்கிப் போட்டுக்கொண்டு நிம்மதியாய்ப் பார்ப்பார்.
அதில் ஒரு சந்தோஷம்.
’’நான் கடவுள்’’ திரைப்படம் பார்க்கப்போனபோது அப்படித்தான் காலி வரிசையில் கடைசியில் அமர்ந்தார்....
ஆனால் அவர் மகிழ்ச்சி சில நிமிஷங்களில் மறைந்தது.
ஒரு தாடிக்காரர் அவர் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.
'' இவ்வளோ இடம் காலி ....என் பக்கத்தில் இடித்துக்கொண்டு ஏன் இப்படி உட்காரணும்?''
இந்த தாடிக்காரனை எப்படியாவது நகர்த்தணும் என்று நினைத்தார்.
தான் வேறு இடத்துக்கு போகலாமே என்று தோன்ற வில்லை.
முதலில் வந்தவனுக்கு உரிமை?
அவர் சொன்னார், பக்கத்தில் இருந்த தாடிக்காரரிடம் :
'' நானும் உங்களை மாதிரி அசிங்கமா தாடி வெச்சிருந்தேங்க.....
ஒரு நாள் கண்ணாடியில் பார்த்ததும் இவ்வளவு அசிங்கமாய் இருக்கே இந்த தாடி ....
அதனால்தான் நம்மளை யாரும் கல்யாணம் செய்துக்க மாட்டேங்கறாங்க என்று புரிந்தது.
உடனே சலூனுக்குப் போய் தாடியை அடியோடு எடுத்து விட்டேன்.''
அதற்கு பக்கத்தில் இருந்த தாடிக்காரர்:
'' அய்யா, நானும் ஒரு நாள் கண்ணாடியில் என் முகத்தை பார்த்தபோது
திடுக்கிட்டேன்,....
உங்களை மாதிரியே அசிங்கமாய் இருந்தது என் முகம்.
அதை மறைக்கத்தான் தாடி வளர்க்க ஆரம்பித்தேன்.'' என்றார்.
'' அப்படியா, அப்போ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?''
''இல்லீங்க...... உங்களுக்கு?''
'' எனக்கும் இன்னும் ஆகலீங்க.''
இந்த common ground அவர்களுக்குள் ஒரு நட்பை ஏற்படுத்தி விட்டது.
இப்போதெல்லாம் பல படங்களை அவர்கள் சேர்ந்தே பார்கிறார்கள்.
தாடியால் இப்படி ஒரு நட்பு.

No comments:
Post a Comment